சென்னை - மதுரை இடையே புதிய தேஜஸ் ரெயில் கட்டணம் என்ன?

சென்னை - மதுரை இடையே அதிவேக தேஜஸ் என்ற புதிய ரெயில், அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது.
x
சென்னை  எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் என்ற அதிவேக புதிய ரெயில், பகல் நேர ரெயிலாக வியாழக்கிழமை தவிர, எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படும். எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், பிற்பகல் 1 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து, பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில், இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். தேஜஸ் ரெயிலில், சேர் கார் கட்டணம் ஆயிரத்து 140 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு வகுப்புக்கான ரெயில் பெட்டி கட்டணம் 2 ஆயிரத்து 135 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை இருக்கும்.சென்னை - மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை, வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்தில் சென்றடையும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்தில் மதுரை சென்று சேரும். தேஜஸ் ரெயில் கட்டணம், சதாப்தி ரெயில் கட்டணத்தை விட, 20 சதவீதம் அதிகம் இருக்கும்.. சென்னை - மதுரை இடையேயான இந்த பகல் நேர ரெயில், விழுப்புரம், திருச்சி ஆகிய இரு ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்