இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் எப்படி வந்தது..? - உயர்நீதிமன்றம் கேள்வி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் எப்படி வந்தது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் எப்படி வந்தது..? - உயர்நீதிமன்றம் கேள்வி
x
விழுப்புரம் மாவட்டத்தில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட  சைக்கிளில் கர்நாடக அரசின் சின்னம் இடம் பெற்றிருந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு,  நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம்  அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவச சைக்கிளில் கர்நாடக அரசு சின்னம் இடம் பெற்றது எப்படி எனவும், இதைக் கூட அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கூடுதல் மனுத்தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமிக்கு  அனுமதி அளித்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்