மேகதாது விவகாரம் : மத்திய நீர்வள ஆணையம், கர்நாடகா மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு...

மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
மேகதாது விவகாரம் : மத்திய நீர்வள ஆணையம், கர்நாடகா மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு...
x
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவை காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மத்திய நீர்வள ஆணையம் முன்பு தவறான தகவல்களை அளித்து இந்த அனுமதியை கர்நாடக அரசு பெற்று உள்ளதாகவும் அந்த மனுவில் தமிழகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மத்திய நீர்வள ஆணையம் அனுமதி தந்துள்ளதாகவும் அதில் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது. காவிரியின் கடைமடை மாநிலமான தமிழகத்தின் இசைவு பெறாமல் கர்நாடக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மனுவில் தமிழகம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன், உறுப்பினர் முகர்ஜி ஆகியோரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும், எதிர்க்காலத்தில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மேற்கொள்ளாமல் இருக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழகம் கோரியுள்ளது.

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணை...

இதனிடையே,  மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான, தமிழக அரசின் வழக்கு, அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்