நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் - மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்...
கோவையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்...
கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள். வெள்ளலூர் - பட்டணம் சாலையில் முல்லை நகர் என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் நகை பறிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். நகையை பறிகொடுத்த பெண் கட்டையால் இருவரையும் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பின்னர் இருவரையும் போத்தனூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
Next Story

