3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற காவல் ஆய்வாளர் - குவியும் பாராட்டுக்கள்...

3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற காவல் ஆய்வாளர் - குவியும் பாராட்டுக்கள்...
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் கோட்டூர்சாமியின் வீட்டிற்கு விசாரணைக்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் , கோட்டூர்சாமியின் குடும்ப சூழ்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கோட்டூர்சாமியின் உடல் நலிவுற்று வேலைக்கு செல்லமுடியாத நிலையில் 3 குழந்தைகளை வளர்க்க வேண்டிய ஏழ்மை சூழ்நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு கலங்கிய காவல் ஆய்வாளர் ஆடிவேல் கோட்டூர்சாமியின் மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து, படிப்பு செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார். காவல்துறை அதிகாரியின் இந்த மனிதாபிமானம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்