ரூ.500 கோடி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம் - விசாரணையை துரிதபடுத்த கோரிக்கை

ரூ.500 கோடி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம் - விசாரணையை துரிதபடுத்த கோரிக்கை
ரூ.500 கோடி மோசடி செய்த  சிட்பண்ட் நிறுவனம் - விசாரணையை துரிதபடுத்த கோரிக்கை
x
கும்பகோணத்தில் மோசடியில் ஈடுபட்ட, சிட்பண்ட் நிறுவன வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அங்குள்ள, 'சித்ரா சிட்பண்ட்' நிறுவனத்தில் ஏலச்சீட்டு மூலம் சுமார் 4,500க்கும் மேற்பட்ட மக்கள் பணம் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு சிட்பண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்களின் வைப்பு நிதியான 500 கோடி ரூபாயுடன் மாயமானார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ராதாகிருஷ்ணன் பேசும் வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் தற்போது, பரவி வருகிறது. இதையடுத்து, ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் மோசடி தொடர்பாக, போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்