பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பிடிக்கும் எலி மணி

உதகை விவசாயிகளின் தோழனாகப் பார்க்கப்படும் எலி மணி பற்றி பார்க்கலாம்.
x
ஊட்டி மலைக் கிராம விவசாயிகளுக்கு பெரிய சவாலாகவும் எதிரியாகவும் இருப்பதே எலிகள்தான். பயிரிடப்படும் காய்கறிகளை பாதுகாக்க படாதபாடுபடும் விவசாயிகள் மத்தியில் திடீர் ஹீரோவாகியுள்ளார் மணி. அறுவடை நேரத்தில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பிடிப்பதில் எக்ஸ்பர்ட்டாக இருக்கிறார் எலி மணி. ஆரம்பத்தில் தன்னுடைய  தோட்டத்திலும் வீட்டிலும் தொல்லை கொடுத்துவந்த எலிகளை கொல்வதற்காக விஷம் வைக்க தொடங்கினார்.

பின்னர், மலைப் பகுதி என்பதால் உதகையில், காய்கறி தோட்டங்களில் தொல்லை கொடுத்துவரும் பெரிய சைஸ் பெருச்சாளிகளை பிடிக்க அவராகவே எலிப்பொறியை உருவாக்கினார். அதற்கு எந்த எலியும் தப்பவில்லை.

அதைப் பார்த்த அக்கம் பக்கத்து தோட்டக்காரர்களும் அவர்களுடைய தோட்டத்தில் எலியை பிடிக்க அழைத்தார்கள். ஆரம்பத்தில் இலவசமாக எலி பிடித்து கொடுத்தவர் அதன் பின்னர், பக்கத்து ஊர்க்காரர்களும் அவரவர் தோட்டத்தில் இருந்த எலிகள பிடிக்க அழைத்ததால் போக்குவரத்து செலவுக்காகவும், எலிப் பொறி செய்வதற்காகவும் தேவைப்படும் தொகையை வாங்குகிறார்.

கூலி வேலைக்கு செல்வதை விட்டுட்டு எலி பிடிப்பதையே முழுநேர தொழிலாக மாற்றிக்கொண்டார். வருமானம் வருவதை காட்டிலும் விவசாயிகளின் வேதனையை போக்குவது எனக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் எலி மணி.

Next Story

மேலும் செய்திகள்