சலவைக் கூடத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீர் : அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

தூத்துக்குடியில் சலவை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
x
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் சலவை தொழிலாளர்களுக்கான கூடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு இதற்கான காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரானது கழிவு நீராக மாறி இருப்பதால் துணிகளை துவைக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்