பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் ?

பள்ளி மாணவர்களின் புத்தகப்பை, எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் ?
x
* இந்தியாவில், பள்ளி மாணவர்கள் பலர், தங்களது உடல் எடையில், 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

* இந்தநிலையில், பள்ளி மாணவர்களின் புத்தகப்பை, எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

* அதில் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை, 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

* 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகப்பையின் எடை, 2 முதல் 3 கிலோ வரை இருக்கலாம். 

* 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவ மாணவிகளின் புத்தகப்பை எடை 4 கிலோவிற்கு மிகாமலும்,

* எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 4.5 கிலோவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  

* 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல், கணிதம் ஆகியவற்றை மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும்

* மாணவர்களை, பாடப்புத்தகங்களை தவிர வேறு எதையும் கொண்டு வர சொல்லக்கூடாது எனவும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்