காணாமல் போன செருப்பை தேடும் போலீஸ்
சென்னையில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்குப்தா என்பவர் பாரிசில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார். இவர் நீரிழிவு நோய் பரிசோதனை செய்வதற்காக அருகே உள்ள பரிசோதனை நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, பரிசோதனை செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராஜேஷின் செருப்பு மாயமாகியுள்ளது. 800 ரூபாய் மதிப்புள்ள அந்த செருப்பு வாங்கி இரண்டே நாட்கள் தான் ஆவதாக ராஜேஷ் கூறுகிறார். செருப்பு தானே என்று சாதாரணமாக கடந்து செல்ல நினைக்காத ராஜேஷ்குப்தா, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தண்டையார் பேட்டை போலீசாரும், விசாரணை நடத்தி செருப்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சினிமாவை மிஞ்சிய இந்த வேடிக்கை சம்பவம் தனியார் செருப்பு நிறுவன விளம்பரத்தை தான் நினைவு படுத்துவதாக தகவல் அறிந்த மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
Next Story