கஜா புயலால் முகாம்களில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ
"முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான், காந்தாரி, சித்தமல்லி,முத்துப்பேட்டை,கோபாலசமுத்திரம், உப்பூர், உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு, பொது மக்களிடம் உணவு குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதால், பயிர்க் கடன் தள்ளுபடி கோரிக்கை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார்.
Next Story
