சேலம் ரயில் கொள்ளை : கொள்ளையர்கள் 5 பேரின் போலீஸ் காவல் நிறைவு

ஓடும் ரயிலில் கொள்ளையடித்த வழக்கில் கைதான வட மாநில கொள்ளையர்கள் 5 பேரையும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில் கொள்ளை : கொள்ளையர்கள் 5 பேரின் போலீஸ் காவல் நிறைவு
x
ஓடும் ரயிலில் துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவர்களில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். 5 பேரிடம் நடத்தப்பட்ட தனித்தனி விசாரணையில், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட முறை, ரயில்கள் மீது ஏறி ஒத்திகை பார்த்ததாகவும் வட மாநிலத்தில் உள்ள 'பார்த்தி' இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

கொள்ளை தொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலம், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 14 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரையும், 26ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். இதனிடையே, சி.பி.சி.ஐ .டி போலிசார் இதுவரை சேகரித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்