150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு பெருந்துறை சந்தை

ஈரோடு மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பெருந்துறை சந்தை..
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு பெருந்துறை சந்தை
x
விவசாயம் சார்ந்து இயங்கக் கூடிய மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் ஒன்று. மஞ்சள் விளையும் இந்த பூமியில் காய்கறிகளும், பழங்களும் விளைந்து ஊரையே பசுமையாக வைத்திருக்கும் என்பது அறிந்ததே... இதுபோல் விவசாயத்தை சார்ந்தவர்கள் தங்கள் நிலத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் பெருந்துறை சந்தை... சுமார் 150 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்.இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் என எல்லாம் இந்த சந்தையில் கிடைக்கிறது.ஈரோட்டை சுற்றிலும் நெல் சாகுபடி பிரதானமாக இருப்பதால் விதவிதமான அரிசி வகைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இங்கிருந்து மொத்தமாக அரிசியை வாங்கி சென்று மற்ற பகுதிகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் உண்டு. வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் இந்த சந்தையை நம்பி ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்