5 ஆம் வகுப்பு வரை படித்த விவசாயியின் சாதனை

விவசாயிகளின் வேலையை மிச்சப்படுத்தும் ஒரு கருவி
5 ஆம் வகுப்பு வரை படித்த விவசாயியின் சாதனை
x
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த, பல்லேரியைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலை பிரதானமாக கொண்டுள்ள இவர், வேர்க்கடலை அறுவடை இயந்திரம், மின்சாரம் இல்லாமல் இயங்கும் மோட்டார் உள்ளிட்ட நவீன கருவிகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார். விவசாயத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட ராஜா, தற்போது நேரடி நெல் விதை நடும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். டிரம் சீடர் என பெயருள்ள இந்த கருவியில் நெல் விதைகளை கொட்டி வைத்து வயலில் தூவும் போது நாற்று நடுவதை போல 
சரியான இடைவெளியில் இதனை நடவு செய்ய முடியும். சுலபமாக களை எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியால் நேரமும் மிச்சமாகும் என்கிறார் விவசாயி ராஜா.


Next Story

மேலும் செய்திகள்