திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆட்சியர் கந்தசாமி மற்றும் எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
x
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 23ம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வை காண திருவண்ணாமலைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபத் திருவிழா ஏற்பாடுகள், மகாரத தேரோட்டத்தின் போது மாட வீதிகளில் செல்லும் தேர்களின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இன்று ஆட்சியர் கந்தசாமி,எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்