தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலுகந்தபுரத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானர முட்டிக்கு சென்றுதான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலுகந்தபுரத்தில் 400  குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானர முட்டிக்கு சென்றுதான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் வானரமுட்டிக்கு செல்லும் சாலை  மோசமாக உள்ளதால் காலை 5 மணிக்கு மட்டும் ஒரு பேருந்து இந்த ஊருக்கு வந்து செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். குண்டும் குழியுமான சாலையால், மிதிவண்டியில் சென்றாலும், அவ்வப்போது மாணவ, மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைவதாக அந்த கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் தெரிவித்தார். அரசு விரைந்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்