நகர பொறியாளர் அறையில் சோதனை எதிரொலி - ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு ரகசிய பேச்சுவார்த்தை?

மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகர பொறியாளர் அறையில் சோதனை எதிரொலி -  ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு ரகசிய பேச்சுவார்த்தை?
x
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள நகர பொறியாளர் அரசு-வின் அறையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பட்டாசு பொருட்கள், வெள்ளி காசுகள் மற்றும்  கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால்,  இந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நகர பொறியாளர் அறையில் ஸ்மார்ட் சிட்டியாக மதுரையை மாற்றும் திட்டத்திற்கான ரகசிய டெண்டர் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்,  அப்போது மதுரையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் நகர பொறியாளருக்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சோதனைக்கு வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் முக்கிய புள்ளிகளின் தலையீடு இருந்ததால் அந்த ஒப்பந்தக்காரரை விசாரிக்காமலேயே அனுப்பி விட்டதாகவும் வெளியாகி உள்ள தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்