நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதியம்பாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
x
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதியம்பாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.  அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அதிகாலை 3 மணிக்கு காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் நெல்லை கோவிந்தர் சுவாமி நெல்லையப்பரை ஆயிரம்கால் மண்டபத்திற்கு தங்கப்பல்லக்கில் அழைத்து வர சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்களுடன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு  திருக்கல்யாணம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்