தீபாவளிக்கு பின்னர் பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம்?

தீபாவளிக்கு பின்னர் பட்டாசு தொழிற்சாலைகளை மூடும் அபாயம் உருவாகி உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு பின்னர் பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம்?
x
உச்சநீதிமன்ற தீர்ப்பாலும், மத்திய அரசின் சுற்றறிக்கையாலும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும், தாங்கள் எந்த சந்தோசத்தில் தீபாவளியை கொண்டாட முடியும் என்றும் சிவகாசி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எந்த ஒரு அரசுகளின் வழிகாட்டுதல் இல்லாமல், நேர்மையாக, எந்தவொரு வரம்பையும் மீறாமல் முன்னோர்களின் வழிகாட்டுதல் பேரில் தொழில் செய்து வருவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒரு சிலர் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்புகளால் பட்டாசு தொழில் சிதைக்கப்பட்டு, அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளதாக சிவகாசி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையை மாற்றவும், தங்களின் தொழில் தொடர்ந்து நடைபெற அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்