நெருங்கும் தீபாவளி : தயாராகும் சத்தியமங்கலம் கை முறுக்கு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் கைமுறுக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நெருங்கும் தீபாவளி : தயாராகும் சத்தியமங்கலம் கை முறுக்கு
x
பலகாரமும், இனிப்பு வகைகளும் பண்டிகையை கூடுதல் உற்சாகமாக்கும். கண்ணிமைக்கும் நேரத்தில் அச்சில் அழகிய வடிவங்களில் பிழிந்தாலும்,  கை முறுக்குகளுக்கு இருக்கும் வரவேற்பும் ருசியும் தனி தான். இதன் சுவைக்காகவே கை முறுக்குகளை தேடிச் சென்று வாங்கும் மக்கள் இன்றும் உண்டு.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் கைமுறுக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரங்கசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கை முறுக்கு தயாரிக்கும் பணியில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. 

அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், வெண்ணெய் என எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த முறுக்குகளை கையில் சுற்றி சிவக்க பொறித்து எடுக்கிறார்கள். பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் இந்த முறுக்குகள் விலையும் குறைவு என்பதால் இதனை தேடி வந்து வாங்கும் மக்கள் உண்டு.

கை முறுக்கு தயாரிக்க ஆட்கள் குறைவாக இருப்பதாகவும் முறுக்கு தயாரிப்பவர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆனால் பண்டிகை நாட்களில் கூடுதல் ஆர்டர்கள் வருவதாகவும், செயற்கை கலப்பில்லாத இந்த பலகாரத்தை மக்களுக்கு கொடுப்பதே தங்களுக்கு மனநிறைவைத் தருவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்