நியூட்ரினோ திட்டத்துக்கு தடை

தேனியில் செயல்படுத்தப்படவிருந்த நியூட்ரினோ திட்டத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது
நியூட்ரினோ திட்டத்துக்கு தடை
x
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்புவழங்கப்பட்டது.நியூட்ரினோ திட்டத்திற்கு தேசிய வனவிலங்குகள் வாரியம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும்,மேற்கு தொடர்ச்சி மலையில், நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து, ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்