தீபாவளி பண்டிகை புதுவரவு : பாட்டிலி டிசைன் பட்டுப் புடவைகள்
பதிவு : நவம்பர் 02, 2018, 09:21 AM
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது...
தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நேரம் இது.. மாதச் சம்பளத்தை வாங்கிய பிறகு ஷாப்பிங் செல்லலாம் என காத்திருந்தவர்கள் இப்போது கடைகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் அந்த வரிசையில் ஈரோடு ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. பொதுவாக மற்ற இடங்களில் இருப்பதை காட்டிலும் கட்டுக்கடங்காத கூட்டம் ஜவுளி சந்தையில்  காணப்படுவதற்கு காரணம் எல்லா பொருட்களும் இங்கு மொத்தமாக மலிவாக கிடைக்கும் என்பது தான்..
ஈரோட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உடைகள் எல்லாம் இங்கு மொத்த விலையில் மலிவாக கிடைப்பதால் பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வதுண்டு..இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுவரவாக கை வேலைப்பாடுகள் நிறைந்த பாட்டிலி டிசைன் பட்டுப் புடவைகள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் புடவைகள் என ஏகப்பட்ட மாடல்கள் வந்திருக்கிறது.. 

ஈரோட்டின் பிரதான பகுதியில் நடக்கும் இந்த ஜவுளி சந்தையில் பெருந்திரளாக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதுவரவு உடைகள் கிடைக்கும் இடம் இது. மேலும் உள்ளாடைகளும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் தீபாவளியை காரணமாக வைத்து ஒரு ஷாப்பிங் டூர் வருவதையே மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இங்கு தயாரிக்கப்படும் உடைகள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் உடைகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. விதவிதமான ஜீன்ஸ் பேன்ட்கள், பாரம்பரியம் கொண்ட வேட்டி ரகங்கள் என எல்லாம் இங்கு கிடைப்பதும் ஜவுளி சந்தையின் சிறப்பாக இருக்கிறது.. 


பிற செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

24 views

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழைக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

38 views

ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

"சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி திமுக அல்ல" - ஆ. ராசா

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தம் விவகாரத்தில், தி.மு.க.வை மையப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்

104 views

உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலையில் உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 views

தாழ்வான மின்கம்பி... மாணவியின் கை, கால்கள் கருகியது...

தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி, சிறுமியின் கை மற்றும் கால்கள் கருகியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.