வேகமாக வந்த கார் மோதி சிறுமி உயிரிழப்பு - ஓட்டுனரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையில் கார் மோதி சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேகமாக வந்த கார் மோதி சிறுமி உயிரிழப்பு - ஓட்டுனரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
சென்னை வில்லிவாக்கம்  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் பிந்துவை, பள்ளியிலிருந்து உறவுப்பெண் விஜயகுமாரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சிறுமி பிந்து மீது மோதியது. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். காரை  வேகமாக ஓட்டி  வந்த தொழிலதிபரின் மகன்  சரண் கோபாலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து  அனைவரும்  கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்