கத்தார் நாட்டில் உயிரிழந்த ஓமலூர் தொழிலாளி - உடலை கொண்டு வர உதவி கோரும் உறவினர்கள்

கத்தார் நாட்டில் உயிரிழந்த இளைஞரின் உடலை கொண்டு வர அரசு உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தார் நாட்டில் உயிரிழந்த ஓமலூர் தொழிலாளி - உடலை கொண்டு வர உதவி கோரும் உறவினர்கள்
x
கத்தார் நாட்டில் சேலம் மாவட்டம்  காமலாபுரத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 5 வருடங்களாக வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோகுல்நாத் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரின் மனைவி நந்தினிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோகுல்நாத் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோகுல்நாத்துக்கு 5 வயதில் ஜனஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளது. ஆண் குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே கோகுல்நாத் உயிரிழந்தது, உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்