தீபாவளி புதுவரவான இனிப்பு வகைகள் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு புதுவரவாக வந்துள்ள இனிப்பு வகைகள் குறித்து ஒரு தொகுப்பு..
தீபாவளி புதுவரவான இனிப்பு வகைகள் என்ன?
x
புத்தாடை, பட்டாசு என பண்டிகை களை கட்டினாலும் இனிப்பும் சேர்ந்தால் தான் தீபாவளி முழுமையடையும். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகளை மகிழ்ச்சியோடு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த பண்டிகைகள் கொடுத்து உதவும் குணத்தை வளர்ப்பதற்காக உருவானதாகவே கருதப்படுகிறது.. தீபாவளிக்காக பல நாட்களுக்கு முன்பாகவே மாவை அரைத்து, சலித்து இரவெல்லாம் கண்விழித்து பலகாரம் சுடும் வழக்கம் நம்மிடையே இருந்தது. ஆனால் மாறி வரும் கால சூழல் காரணமாக பலகாரம் செய்வதற்கு பதிலாக கடைகளில் ஆர்டர் கொடுக்கும் வழக்கமும் வளர்ந்து வருகிறது. அதற்கேற்றார் போல வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ருசியான இனிப்பு வகைகளும் கடைகளில் வந்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டிரை ப்ரூட்ஸால் ஆன இனிப்புகள் தான் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. பாதாம், உலர் திராட்சை,முந்திரி, பிஸ்தா, பேரீச்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இனிப்பு வகைகள் மக்களை கவரும் வகையில் கண்கவர் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. டிரை ப்ரூட் ஹனி டியூ, டிரை ப்ரூட் காஜூ பாக், டயமண்ட் கேக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ கஷ்மீர் என விதவிதமான பெயர்களில் இந்த இனிப்புகள் கிடைக்கின்றன.

இதுமட்டுமின்றி பால் மற்றும் நெய்யினால் செய்யப்பட்ட இனிப்புகளும் எவர் க்ரீன் சாய்ஸாகவே இருக்கிறது. மோதி லட்டு, குலாப் ஜாமூன், மைசூர் பாக், சந்திரகலா போன்ற இனிப்பு வகைகளை மக்கள் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். நெய் மணம் கமழும் இந்த இனிப்பு வகைகள் எல்லா தரப்பினருக்கும் பிடித்தது என்பதால் விற்பனையும் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வகையில் இனிப்பு வகைகளை கண்கவர் பேக்கிங்கில் வைத்து அழகிய கிப்ட் பாக்ஸ்களாகவும் விற்பனை செய்கிறார்கள். அதிலும் மில்க் ஸ்வீட், டிரை ப்ரூட்ஸ் செட் என விலைக்கு ஏற்றார் போல கிடைக்கிறது. 350 ரூபாய் முதல் இந்த கிப்ட் பாக்ஸ் செட் கிடைப்பதால் எல்லாரும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் கிடைக்கிறது.. அதேபோல் ஆவின் நிறுவனம் சார்பிலும் இந்த ஆண்டு புதுவரவு இனிப்புகள் சந்தைக்கு வந்திருக்கிறது. பாதாம் அல்வா, பாதுஷா, நட்ஸ் அல்வா, மில்க் கேக் என நான்கு வெரைட்டிகளை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கிறார்கள்...
Next Story

மேலும் செய்திகள்