வடமாநிலங்களில் மஞ்சளுக்கு அதிக கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி

வடமாநிலங்களில் ஏற்பட்ட கிராக்கி காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் குவிண்டாலுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் மஞ்சளுக்கு அதிக கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி
x
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து குறைந்ததன் காரணமாக, ஈரோடு மஞ்சளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.  இதனால் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தரமான மஞ்சள் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல, ஐந்தாண்டுகளாக இருப்பில் வைக்கப்பட்ட தரம் குறைந்த பழைய மஞ்சள் குவிண்டாலுக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு வணிகமாகிறது. வரத்து குறைந்து தேவை அதிகரித்த நிலையில், அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்