350 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

திருச்சி தனியார் மருத்துவமனையில், இதய கோளாறுடன் பிறந்த குழந்தை, சிகிச்சைக்காக, நான்கு மணி நேரம், 10 நிமிடங்களில், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
350 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
x
குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தையை சென்னைக்கு, கொண்டு செல்ல வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஜி.என்.ஆர்.ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் அதற்கான பணிகளில் களம் இறங்கினர். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை வரை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன.  திருச்சியில் இருந்து குழந்தையை ஏற்றி கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட, அதற்கு முன்னதாக வாட்ஸ் அப்பில் ஒருங்கிணைந்து  ,  சுமார் 15 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே நின்று குழந்தை வந்த ஆம்புலன்சுக்கு முன்னே சென்று போக்குவரத்தை சரி செய்த படியே சென்றன. இதனால், 350 கிலோ மீட்டர் தூரத்தை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை 4 மணி நேரம் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றது. உரிய நேரத்தில், சிகிச்சைக்காக, குழந்தை அனுமதிக்கப்பட்டதற்கு, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் அவசர கால மருத்துவ நிபுணர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



Next Story

மேலும் செய்திகள்