முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

முல்லை பெரியாரில் சுற்றுச்சுழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
x
முல்லை பெரியாறில் தற்போது உள்ள அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வு நடத்த கேரள அரசுக்கு, கடந்த செப்டம்பர் 27-ல் நடந்த மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாட்டு துறையின், கட்டுப்பாட்டில் உள்ள நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே திகைப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.

சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு வழங்கியுள்ள அனுமதி, உச்சநீதிமன்றம் 2014 மே 7 -ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்பதையும்  அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த பிரச்சினையில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, ஆய்வு நடத்த வழங்கிய அனுமதியை திரும்பப் பெற, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாட்டு துறைக்கு அறிவுறுத்துமாறு பிரதமரை, முதலமைச்சர்  வலியுறுத்தி உள்ளார்.

புதிய அணை தொடர்பாக எதிர்க்காலத்தில், கேரள அரசு ஏதேனும் திட்டத்தை கொண்டு வந்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாட்டுத் துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் நிபுணர் குழுக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்