பழனிமலை கோவிலில் வன்னிகாசுரன் வதம் : மலைக்கோவில் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்வை ஒட்டி, மலைக்கோவில் மூலஸ்தானம் அடைக்கப்பட்டது.
பழனிமலை கோவிலில் வன்னிகாசுரன் வதம் : மலைக்கோவில் அடைப்பு
x
திண்டுக்கல் மாவட்டம், பழனியில்  வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்வை ஒட்டி, மலைக்கோவில் மூலஸ்தானம் அடைக்கப்பட்டது. பழனி மலை முருகன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 9 ஆம் தேதி துவங்கியது. 

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற விழாவில், முருகனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகளும், தீப ஆராதனையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து, வன்னிகாசுரனை வதம் செய்வதால், மலைக்கோயில்  நடை சாத்தப்பட்டது. வதம் நடைப்பெற்று முடிந்த பிறகு, சம்ரோட்சண  பூஜைகள் செய்யப்பட்டு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்