வனஉயிரியல் பூங்காவுக்கு வந்துள்ள அமெரிக்க கிளிக

"பல வண்ண கிளிகள் பார்வையாளர்களை கவரும்"
வனஉயிரியல் பூங்காவுக்கு வந்துள்ள அமெரிக்க கிளிக
x
வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் 61 வகையான இந்திய பறவைகள் மற்றும் 28 வகையான வெளிநாட்டு பறவை இனங்கள் உள்ளன. பூங்காவில் மொத்தம் ஆயிரத்து 604 பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வனத்துறையால், பிடிக்கப்பட்ட மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வாழும், ஏழு கிளி வகைகள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன.  இதனையடுத்து பூங்காவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது..பல வண்ணங்களில் காணப்படும் அமெரிக்க கிளிகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்