அறிவியல் எழுத்தாளர் ராமதுரை உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழில் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் ராமதுரை சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்றவர்
அறிவியல் எழுத்தாளர் ராமதுரை உடல்நலக்குறைவால் காலமானார்
x
தமிழில் வெளியான பல அறிவியல் நூல்களை எழுதியவர் எழுத்தாளர் என்.ராமதுரை. சிறுவர்களுக்கு புரியும் வகையில் அறிவியலை எளிமையாக தன் எழுத்துகளின் மூலம் கொண்டு சென்றவர் இவர். நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். அறிவியல் எது? ஏன்? எப்படி? , விண்வெளி, பருவநிலை மாற்றம், சூரிய மண்டல விந்தைகள் என பல தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சிறந்த 
அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதையும் பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட ராமதுரை சென்னையில் 
காலமானார். அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் இன்று நடக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்