பிரிந்து வாழ்ந்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

தப்பி ஓடிய கணவனை பிடிக்க போலீசார் தீவிரம்
பிரிந்து வாழ்ந்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரிபட்டியில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, அவரது கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பிரபு, ராதிகா தம்பதி, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த கணவர் பிரபு, வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய ராதிகாவை, அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ராதிகா மருத்துவமனை செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கணவன் பிரபுவை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்