சென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் : ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
சென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் : ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரண்டு சிறுவர்களிடம்  ஜோலார்பேட்டை ரயில்வே  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சென்னை போரூர், பெரியப்பஞ்சேரி  பகுதியை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் ஹரீஷ் என்பது தெரியவந்தது. பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் வந்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்களை ரயில்வே போலீசார் காட்பாடியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்