தசரா ஊர்வலம் - களைகட்டியது ஒத்திகை : திரளான சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

மைசூர் தசரா வரலாற்றில் முதன் முறையாக தசரா ஊர்வல ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
தசரா ஊர்வலம் - களைகட்டியது ஒத்திகை : திரளான சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
x
மைசூர் தசரா வரலாற்றில் முதன் முறையாக தசரா ஊர்வல ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில், வழக்கமாக பத்தாவது நாள் நடைபெறும் தசரா ஊர்வலத்தில் பங்கு பெறும் அனைத்துக் கலைஞர்களும் அதேபோல அம்பாரி சுமக்கும் அர்ஜுனா யானை மற்றும் யானைகள், குதிரைகள் பங்கேற்றன. ஒத்திகை நிகழ்வு என்பதால் இதில் அம்பாரி மீது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப் படவில்லை. அதை தவிர்த்து மற்ற அனைத்தும் தசரா ஊர்வலத்தில் நடைபெறுவது போலவே ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மைசூர் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தசரா ஊர்வலத்தை 
கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்