ஆட்டுப் பண்ணை தொழிலில் நல்ல லாபம் : ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பண்ணை ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
ஆட்டுப் பண்ணை தொழிலில்  நல்ல லாபம் : ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறும் விவசாயிகள்
x
8 அடி உயரம்  பண்ணை அமைத்து  அதில் தலைச்சேரி வகை ஆடுகளை வளர்க்கின்றனர். ஆடுகளுக்கு தீவனமாக நிலக்கடலை செடிகள்,  புண்ணாக்கு உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர். ஆடுகள் குட்டி ஈன்றவுடன்  4 மாதங்களில் 15 கிலோ எடை வரை வளர்ந்து  இறைச்சிக்காக விற்பணை செய்யப்படுகிறது. வளர்ந்த ஆடுகளை வியாபாரிகள் பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். நல்ல லாபம் கிடைப்பதால், மற்ற விவசாயிகளும்  ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்