471 புதிய பேருந்துகளில், ஒன்று மட்டுமே சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
பதிவு : அக்டோபர் 12, 2018, 12:06 PM
புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளில் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இது, தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் பேருந்து பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமாகும். 3 ஆயிரத்து 300 பேருந்துகளை கொண்ட சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 70 சதவீத பேருந்துகள், 6 லட்சம் கிலோ மீட்டருக்கும் மேல் ஓடியும், சட்டப்படி நிறுத்தப்படாமல், தொடர்ந்து இயக்கப்படுகின்றன. 

கடந்த ஓராண்டில் 250 பேருந்துகள், இயக்கவே தகுதியில்லை என நீக்கப்பட்ட நிலையில், புதிய பேருந்துகள் விரைவில் வழங்கப்படும் என அரசு கூறியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் புதன்கிழமை  துவக்கி வைக்கப்பட்ட 471  பேருந்துகளில் சென்னைக்கு ஒரே ஒரு பேருந்து தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, கடந்த ஜூலை மாதம் 515 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. அதிலும், சென்னைக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

இந்த ஆண்டு புதிதாக வாங்கப்பட்ட 986 பேருந்துகளில், 320 பேருந்துகள் சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கபட்டுள்ளன. இது புதிய பேருந்துகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2675 views

பிற செய்திகள்

"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

26 views

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் - கற்பகவிநாயகம்

7 பேரின் விடுதலையில் காலதாமதம் செய்யும் ஆளுநரின் முடிவு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என கற்பகவிநாயகம் தெரிவித்துள்ளார்.

38 views

"பேட்ட" படத்தின் பாடல்கள் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.

9 views

சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வென்ற கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து

2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68 views

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்

தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

13 views

அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை

சேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.