எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு
பதிவு : அக்டோபர் 11, 2018, 12:48 PM
மாற்றம் : அக்டோபர் 11, 2018, 12:50 PM
எம்ஜிஆரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டது தொடர்பான வழிமுறைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அப்பலோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டில், முதலமைச்சராக இருந்த  எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்ததை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். 

ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் பலர், முரண்பட்ட தகவல்களை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் , அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் வரும் 23-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அப்பலோ நிர்வாகத்திற்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.