10 அறைகளில் 5,000 சிலைகளுடன் கொலு வைத்து வழிபடும் குடும்பம்
பதிவு : அக்டோபர் 11, 2018, 05:01 AM
தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தியாகராஜநகரில் உள்ள மரகதம் குடும்பத்தினர் 5 ஆயிரம் பொம்மைகளை கொண்டு, கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
43-வது ஆண்டாக கொலுவைத்து வழிபாடு நடத்தி வருகிறார் மரகதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வீட்டில் உள்ள 10 அறைகளிலும் 5 ஆயிரம் பொம்மைகள் உதவியுடன் கொலு அமைத்துள்ளார். பொதுவாக வீடுகளில் 5,7,9,11 அடுக்கு கொண்ட ஸ்டாண்டில் மட்டுமே கொலுவைப்பது வழக்கம் , ஆனால் மரகதம் வீடுமுழுவதும் கொலுவைத்துள்ளது வீட்டிற்கு வரும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.  இந்த ஆண்டு கொலுவில், புதிய வரவாக அஷ்ட பைரவர் சிலை, சப்த கன்னிகள், ராமாயாண கதையை விளக்கும் வகையில் சிலைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டு, தாமிரபரணி நதியை பாதுகாப்பது மற்றும் புஷ்கர விழா , ஒற்றுமையை வலியுறுத்துவது, மாமல்லபுரம் பல்லவர் காலத்து சிற்பங்கள் ஆகியவையும் கொலுவில் இடம் பெற்றுள்ளன. அயல்நாடுகளில் இருந்தும் பொம்மைகள் வரவழைக்கப்பட்டும் கொலுவில் இடம் பெறச் செய்துள்ள நிலையில், இந்த கொலுவை அமைக்க 15 நாட்கள் ஆனதாக தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

37 views

தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...

நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

741 views

மாதா சிலையின் கிரீடம் , செங்கோல் திருட்டு - சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு

நெல்லை என்.ஜீ.ஓ காலணியில் உள்ள சகாய மாதா ஆலயத்தில், மாதா சிலையில் இருந்து வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி செங்கோல் திருடப்பட்டுள்ளது.

1604 views

பிற செய்திகள்

குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் பொதுமக்கள்

சென்னை ஆர்.ஏ.புரம், பக்கிங்ஹாம் கால்வாய்க்கு அருகில் வீடு கட்டி வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தால் அவர்களின் குடும்ப அட்டையை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆர்.பி உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜேஸ்வரி தீக்குளிக்க முயற்சி செய்ய அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அதனைத் தடுத்தனர்

27 views

யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் - ராஜா செந்தூர்பாண்டியன்

ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

36 views

பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன் மண்பானையும் இணைத்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 views

தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக செயல்படும் அரசு பள்ளி

திருவண்ணாமலை அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பூ மற்றும் மூலிகை தோட்டம் அமைக்கும் பயிற்சிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.

17 views

உடல்நல குறைவால் உயிரிழந்த விமானப்படை ஊழியர்

தருமபுரியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த விமானப்படை ஊழியரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.