மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது - அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்

ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சிசிடிவி மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது - அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்
x
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான காட்சிகள் அழிந்துவிட்டதாக அந்த பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்திற்கு, ஜெயலலிதாவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது சிசிடிவி காட்சிகள் பதிவாவது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவி பதிவை நிறுத்திவைக்க சொன்னார்கள் என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை டாக்டர்கள் ரமேஷ், செந்தில், பாபு ஆப்ரகாம் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் சத்தியபாமா ஆகியோர் தயார் செய்தார்கள் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தயார் செய்யப்பட்ட அறிக்கை முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ் மற்றும் சுகாதார துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இறுதி செய்து அனுப்பிய மருத்துவ அறிக்கையில் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கையொப்பம் மட்டுமே போட்டார் எனவும்  அப்பல்லோ பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்