கல்வராயன் மலையில் காட்டாற்று வெள்ளம் : 300 பேர் தவிப்பு : பல மணி நேரம் போராடி மீட்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், எதிர்பாராதவிதமாக சிக்கி தவித்த 300 பேர் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டனர்.
கல்வராயன் மலையில் காட்டாற்று வெள்ளம் : 300 பேர் தவிப்பு : பல மணி நேரம் போராடி மீட்பு
x
* சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், எதிர்பாராதவிதமாக சிக்கி தவித்த 300 பேர் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டனர். காந்தி ஜெயந்தியையொட்டி, விடுமுறை தினம் என்பதால் குடும்பம் குடும்பாக ஆயிரக்கணக்கானோர், நீர் வீழ்ச்சியில் குளிக்க வந்திருந்தனர்.

*  மழை கொட்டி தீர்த்ததால், திடீர் காட்டாற்று வெள்ளம் உருவானது. இதனால், நீர் வீழ்ச்சிக்கு சென்றவர்கள் திரும்ப முடியாமல், சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும், அப்பகுதி இளைஞர்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்து, உயிருக்கு போராடிய அனைவரையும் பல மணி நேரம் போராடி,பத்திரமாக மீட்டனர். இதனிடையே, கல்வராயன் மலை நீர் வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்