தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது.
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...
x
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சித்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின், 4 வயது குழந்தை ஷர்மிளா, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்தக் குழந்தை, தவறி விழுந்தது. இதனையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஷர்மிளா, அங்கு உயிரிழந்தது. திருத்தணி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்