வீடு புகுந்து மிரட்டி பணத்தை பறித்தார் - காவல் ஆய்வாளர் மீது ஒப்பந்ததாரர் புகார்

வீடு புகுந்து மிரட்டி பணம் பறித்து சென்றதாக காவல் ஆய்வாளர் மீது ஒப்பந்ததாரர் புகார் அளித்துள்ளார்.
வீடு புகுந்து மிரட்டி பணத்தை பறித்தார் - காவல் ஆய்வாளர் மீது ஒப்பந்ததாரர் புகார்
x
சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் முத்தையா, தனது வீட்டுக்குள் காவல் ஆய்வாளர் தாம்சன், தாம்பரம் சிறுத்தை பாண்டியன், சின்னத்திரை நடிகை சஜினி ஆகியோர் புகுந்து தன்னை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் காசோலை வாங்கி சென்றதாக புகார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள அந்த புகாரில், போலீசிடம் தகவல் தெரிவித்தால் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  புகார் கூறப்பட்டுள்ள தாம்சன், லஞ்ச ஒழிப்புதுறை வழக்கில் சிக்கி பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்