கள்ளக்காதல் தவறில்லை என நீதிமன்றமே கூறிவிட்டது...கணவனின் பதிலால் அதிர்ச்சி- மனைவி தற்கொலை

கள்ளக்காதல் தவறில்லை என நீதிமன்றமே கூறியவிட்டதாகக் கணவன் கூறியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் தவறில்லை என நீதிமன்றமே கூறிவிட்டது...கணவனின் பதிலால் அதிர்ச்சி- மனைவி தற்கொலை
x
* சென்னை அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காதல் தம்பதிகளான ஜான்பால் பிராங்க்ளின் - புஷ்பலதா-வுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஜான்பாலுக்கு, வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

* இந்நிலையில்,நேற்றிரவு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், "நீதிமன்றமே கள்ளக்காதல் தவறில்லை" என கூறிவிட்டதாக, புஷ்பலதாவிடம், ஜான்பால் தெரிவித்ததாகத் தெரிகிறது. 

* இதனால் மனமுடைந்த புஷ்பலதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக  எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்