பாலித்தீன் கவர்கள் இல்லாமல் சுகாதாரமாக செயல்படும் புதுக்கோட்டை உழவர் சந்தை

பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சுகாதாரமான முறையில் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை உழவர் சந்தை
பாலித்தீன் கவர்கள் இல்லாமல் சுகாதாரமாக செயல்படும் புதுக்கோட்டை உழவர் சந்தை
x
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக கொண்டு வந்த மக்களிடம் சேர்க்கும் பணியை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது சந்தைகள். அப்படிப்பட்ட சந்தைகளில் உழவர் சந்தைக்கு பிரதான இடம் உண்டு.

தமிழக அரசின் வேளாண் விற்பனை துறையின் கீழ் இயங்கும் இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தின் பிரதான மாவட்டங்களில் இன்றும் திறம்பட இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட சந்தைகளில் ஒன்று தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை.

புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு இந்த உழவர் சந்தை தான் வாழ்வாதாரம் அளிக்கும் இடமாக இருக்கிறது. காரணம் காலை 6 மணிக்கே நீங்கள் இங்கு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ப்ரெஷ் ஆக வாங்க முடியும். 

காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எல்லாம் இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. மற்ற இடங்களில் வாங்குவதை விட இங்கு மலிவான விலையில் காய்கறிகளை நிறைவாக வாங்கிச் செல்ல முடியும் என்பதே இந்த சந்தையின் சிறப்பு.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக இந்த சந்தையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு காய்கறிகளை வாங்க வருவோரும் சரி, விற்க வருவோரும் சரி துணியால் ஆன பைகளையே கொண்டு வருகிறார்கள். பிளாஸ்டிக் துளியும் இன்றி சுத்தமான முறையில் இயற்கையான ஒரு சந்தையாக இது செயல்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்