பிரசித்தி பெற்ற சின்ன திருப்பதி கோயில்

புரட்டாசி மாதத்தில் களை கட்டும் பெருமாள் கோயில்
பிரசித்தி பெற்ற சின்ன திருப்பதி கோயில்
x
புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோயில்கள் எல்லாம் விழாக் கோலம் தான். திருப்பதி ஏழுமலையான் தொடங்கி சின்ன சின்ன கோயில்கள் வரை எல்லாமே பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதும்.. 
திருப்பதி செல்ல முடியாதவர்களின் குறையை போக்கும் வகையில் சின்ன திருப்பதி என்ற அடையாளத்தோடு இருக்கிறது சேலம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில். சேலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோயில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் கோயிலின் வரலாறு அறிந்தவர்கள். 
வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் குன்றின் மீது பாம்பு புற்று ஒன்று இருந்ததாகவும், அப்போது சிறுவன் ஒருவனால் சாமி சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சிறுவனின் பக்தியை மெச்சிய திருமால் அவனுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்த தலமே இன்று சின்ன திருப்பதியாக மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் மூலவராக வெங்கடேச பெருமாள் காட்சி தருகிறார். மகாலட்சுமி, ஆண்டாள், ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது. புரட்டாசி மாதத்தின் எல்லா நாட்களும் இந்த கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மார்கழி மாதம், சொர்க்க வாசல் திறப்பு, கோயில் திருத்தேரோட்ட நிகழ்வு என எல்லாமே சிறப்பாக நடக்கிறது. 
தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கி அருள்பாலிக்கிறார் வெங்கடேச பெருமாள்.


Next Story

மேலும் செய்திகள்