எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : பிரமாண்ட ஏற்பாடு : தலைவர்கள் பங்கேற்பு

எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா  : பிரமாண்ட ஏற்பாடு : தலைவர்கள் பங்கேற்பு
x
சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்,  சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, எம்ஜிஆர் பொன் மொழி தொகுப்பை வெளியிட்டு, விழா பேருரை ஆற்றுகிறார். விழாவில், எம்ஜிஆரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, நூற்றாண்டு நிறைவு விழா மலரும் வெளியிடப்படும். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவை யொட்டி, சென்னை - அண்ணாசாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், வாழ்த்துக்கள் தெரிவித்து, பேனர்கள் - கட் அவுட்டுகள், பதாகைகள் - கொடிகள் - தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்