"வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை" - ஆளுநர் பன்வாரி லால் புரோகித்

அரசாங்கத்தில் மட்டும் அல்ல, தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார்.
வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை - ஆளுநர் பன்வாரி லால் புரோகித்
x
அரசாங்கத்தில் மட்டும் அல்ல, தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார். சென்னை தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சி கிண்டி தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், தமக்கு ஹெலிகாப்டரில் செல்ல வாய்ப்பிருந்தும், மக்கள் பணம் வீணாகக் கூடாது என்பதாலேயே  24 மாவட்டங்களில் ஆய்வுக்கு சாலை மார்க்கமாக சென்றதாக கூறினார். நாட்டின் மருத்துவ தலைநகராக சென்னை விளங்குவதாகவும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் ஏற்றுமதியில் நாட்டில் தமிழகம்  இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் பெருமிதத்துடன் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்