பாலத்தின் அடியில் கிடந்த சாமி சிலைகள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் அடியில் கிடந்த 18 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர்.
பாலத்தின் அடியில் கிடந்த சாமி சிலைகள்
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் அடியில் கிடந்த 18 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர்.  சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எளாவூர் என்ற இடத்தில் இந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சுமார் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உயரம் உள்ள இந்த கற்சிலைகளை கடத்தல் கும்பல் வீசி விட்டு சென்றனரா? அல்லது யாராவது சிலைகளை அங்கு பதுக்கி வைத்திருந்தினரா? என்பது தெரியவில்லை. பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து சிலைகளும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்