"கூவத்தூரில் நடந்தது என்ன? " - கருணாஸ்

"கூவத்தூரில் நடந்தது என்ன? : தகவல் தெரிவிப்பேன்" - கருணாஸ்
கூவத்தூரில் நடந்தது என்ன?  - கருணாஸ்
x
ஜெயலலிதா மறைவுக்குப்பின், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்ட கூவத்தூரில் நடந்தது என்ன என்பது குறித்து, தேவைப்பட்டால்,   உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆன கருணாஸ் கார் மூலம் சென்னை வந்தார். நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்குலத்தோர் சமுதாயத்தை ஒடுக்க நினைத்தால், தமிழக அரசுக்கு எதிராக எங்கள் குரல் ஒலிக்கும் என்று கருணாஸ் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்