ரமணா திரைப்பட பாணியில் இறந்து 3 நாள் ஆனவருக்கு சிகிச்சை?

இறந்து 3 நாள் ஆனவருக்கு சிகிச்சை? - தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
ரமணா திரைப்பட பாணியில் இறந்து 3 நாள் ஆனவருக்கு சிகிச்சை?
x
நாகப்பட்டினம் கீழ ஈசனூர் கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் சேகர். இவர் வயிற்று வலி காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மேலும் 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளது. தங்களால் அவ்வளவு பணம் செலுத்த முடியாது என்று கூறிய உறவினர்கள், சேகரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அங்கு சேகரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து மூன்று நாட்களாகிவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்